கன்னடத்தின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான தயானந்தா கன்னட இலக்கியம், ஆங்கில இலக்கியம் மற்றும் இதழியல் ஆகியவற்றில் முதுகலைப் பட்டம் பெற்றவர். பத்திரிக்கையாளராகவும் பணியாற்றிய அவர், ‘சமயா டிவி’, ‘பிரஜாவாணி’ மற்றும் ‘சமாச்சாரா.காம்’ செய்தி நிறுவனங்களில் பத்தாண்டு கால இதழியல் அனுபவத்தைப் பெற்றுள்ளார். மேலும் தற்போது பெங்களூரில் உள்ள சம்வாட் நிறுவனத்தில் ஊடக விரிவுரையாளராக உள்ளார். ‘பாலபூர்ணா’ நாடகம் 2005ல் கன்னட புஸ்தக பிரதிகாராவின் ஆதரவில் வெளிவந்தது. 2017 ஆம் ஆண்டு வெளியான ‘தேவரு கச்சித செபு’ என்ற அவரது கதைத் தொகுப்பிற்காக சந்தா புஸ்தக பஹுமானா விருது பெற்றார். ‘புத்தனா கிவி’ இவரது இரண்டாவது கதைத் தொகுப்பு. இவருடைய கதைகள் பசவராஜா கட்டிமணி யுவ புரஸ்காரா, குல்பர்கா பல்கலைக்கழக தங்கப் பதக்கம், சங்கரமணா கதா புரஸ்காரா, பிரஜாவானி தீபாவளி கதாஸ்பர்தே பஹுமானா, சமாஜ்முகி கதா புரஸ்காரா போன்றவற்றைப் பெற்றுள்ளன.