தாய்மொழி தமிழ் என்றாலும் கன்னட இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க முத்திரை பதித்தவர் கே.நல்லதம்பி. தமிழ் மற்றும் கன்னட கலாச்சாரங்களுக்கு இடையே பாலமாக விளங்கும் இவர், இரு மொழிகளுக்கும் இடையே ஏராளமான தனித்துவ நாவல்களை மொழிபெயர்த்துள்ளார். ‘அர்த்தநாரீஸ்வர’, ‘ஹுனிசெமரட கதே’, ‘ஹல்லா பந்து ஹல்லா’, ‘குடிகண்டே மாட்டு இடை கதேகளு’, ‘பாபு ஹெஜ்ஜெகலல்லி’, ‘மத்தொண்டு ராத்திரி’, ‘அத்தர்’, ‘சரசவனியா கினிகள்’, ‘கோஷி’ஸ், கவிதேகளு’, ‘ஹத்து தமிழு கதேகளு, ‘கூலி’, ‘ஹூ கொண்டா’, மற்றும் ‘பொனாச்சி’ ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க படைப்புகள்.