நாட்டுப்புறவியலாளர், கதைசொல்லி மற்றும் நாவலாசிரியர் கிருஷ்ணமூர்த்தி ஹனூர் மைசூர் குவெம்பு கன்னடப் பல்கலைக்கழகத்தில் சிறப்பு பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்.
இவரது ‘அஜ்ஞாதனோபன் ஆத்மா சரித்ரே’ என்ற நாவல் வாசகர்களின் பாராட்டைப் பெற்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கேரிகே பண்டா ஹோரி, கத்தலல்லி கண்ட முக மற்றும் கலேடா மங்களவர முஸ்ஸஞ்சே ஆகியவை சிறுகதைத் தொகுப்புகள். ‘பரோ கீஸ்கனே’ மற்றும் ‘நிக்ஷேபா’ ஆகியவை இவரது நாவல்கள். நாட்டுப்புறவியல் தொடர்பான பல படைப்புகளைத் தொகுத்துள்ளார். இவர் தொகுத்த கர்நாடக நாட்டுப்புற கலாச்சார கலைக்களஞ்சியம் கன்னட நாட்டுப்புறவியலை ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்துகிறது. சென்னை ஆசிய ஆய்வுகள் நிறுவனம் இதனை வெளியிட்டுள்ளது. பழங்குடியினரின் ஆய்வுகள் பற்றிய மகாபிரபந்த மியாச பெடரு என்ற புத்தகம் அவரது முனைவர் பட்டம் பெற்ற போது எழுதியது. இது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு குப்பத்தில் உள்ள திராவிட பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இவர் கல்வெட்டுகள், ஹலகன்னடம் மற்றும் நாட்டுப்புறவியல் ஆய்வுகளின் தொடர்புடையவர. இவரது சமீபத்திய படைப்பு களுதாரிய கதேகலு. 40க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார்.