பத்மஸ்ரீ மஞ்சம்மா ஜோகதி
மஞ்சம்மா ஜோகதி ஒரு ஜோகதி நடனக் கலைஞர். ஜோகதி வட கர்நாடகாவின் ஒரு நாட்டுப்புற நடன வடிவம் ஆகும். இவர கன்னட நாடக நடிகை மற்றும் பாடகி ஆவார். 2019 ஆம் ஆண்டில், மாநிலத்தின் நாட்டுப்புற கலைகளின் உச்ச அமைப்பான கர்நாடக நாட்டுப்புற அகாடமியின் தலைவரான முதல் திருநங்கை ஆவார். ஜனவரி 2021 இல், நாட்டுப்புறக் கலைத் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கியது. மஞ்சம்மா ஜோகதியின் சுயசரிதையான ‘நடுவே சுளிவா ஹென்னு‘ நூலை ஆசிரியர் அருண் ஜோலடா குட்லிகி அழகாகச் சொல்லியிருக்கிறார். இவரது வாழ்க்கை வரலாறு கர்நாடக நாட்டுப்புற பல்கலைக்கழகம் மற்றும் கர்நாடக மாநில மகளிர் பல்கலைக்கழகத்தின் பட்டதாரி மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.