பிரபல கன்னட இலக்கியவாதி முட்னாகுடு சின்னசாமி மூன்று தலைமுறைகளை பாதித்த கவிஞர். தலித் புரட்சிகர இலக்கியங்களுடன் இணைந்து பல முக்கியமான படைப்புகளை உருவாக்கி, கலாச்சாரம், சமூக சேவை மற்றும் நாடகத்துறையிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். அவரது முக்கிய ஆர்வம் கவிதை என்றாலும், அவர் கதைகள், நாடகங்கள், மொழிபெயர்ப்பு எடிட்டிங் உட்பட பல்வேறு இலக்கிய வகைகளில் பணியாற்றியுள்ளார். இதுவரை 38 க்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.
‘மத்தே மலே பருவ முன்’, ‘நானொன்று மறவாகித்தரே’, ‘சப்பாலி மத்து நானு’, ‘புத்த பெளடிங்கலு’ ஆகியவை இவரது முக்கிய கவிதைத் தொகுப்புகள். ‘மோகன தீபா’ மற்றும் ‘பாபபிரக்னே’ போன்றவை இவரது சிறுகதைத் தொகுப்புகள். ‘கெண்டமண்டலா’, ‘பகுரூபி’ இவரது நாடகங்கள். மற்ற முக்கியமான உரைநடைப் படைப்புகள், ‘ஒண்டு கொட ஹலினா சமரா’, ‘அபரிமிதடா கட்டாலே’, ‘பஹுத்வாத பாரத மத்து பௌத்த தத்விகதே’ ஆகியவை இவரது தத்துவ எழுத்துக்களுக்கு சான்றுகள்.