என்.எஸ். ஸ்ரீதரமூர்த்தி
பத்திரிக்கையாளர், கட்டுரையாளர், எழுத்தாளர் என்.எஸ். ஸ்ரீதரமூர்த்தி மங்களூர் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டத்தை தங்கப் பதக்கத்துடன் பெற்றவர். விரிவுரையாளராகப் பணியைத் தொடங்கிய இவர், ‘மல்லிகே‘ மாத இதழின் மூலம் இதழியல் துறையில் நுழைந்து, கடந்த இருபதாண்டுகளாக பண்பாட்டு இதழியலைக் காப்பாற்ற கடுமையாக உழைத்து வருகிறார். திரைப்பட வரலாற்றை ஆழமாகப் படித்தவர். இலக்கியம் மற்றும் ஆன்மிகத் துறையில் மகத்தான பங்களிப்பைச் செய்துள்ளார். ‘சிம்மவலோகனா’, ‘நகுவ நயன மதுர மௌன’, ‘மஞ்சுளா எம்ப எண்டெண்டு மரேயடா ஹடு’, ‘சாகித்ய சம்வதா’, ‘ஹாடு முகிழ்வுதில்லா’, ‘சினிமா எண்ணுவ நாளே’ ஆகியவை இவரது முக்கியப் படைப்புகள். ‘கன்னடத் திரைப்படப் பாடல்களின் கலாச்சார ஆய்வு‘ என்பது இவரது ஆய்வுப் பணி. இலக்கியம் மற்றும் கலாச்சாரத் துறைகளில் பெரும் பங்களிப்பை வழங்கிய ஸ்ரீதரமூர்த்தி, RNR புரஸ்கார் மற்றும் சுவர்ண கர்நாடகா புரஸ்கார் உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார்.