மடிகேரி அருகே உள்ள சம்பாஜே பகுதியைச் சேர்ந்த விவசாயி ஸ்மிதா அமிர்தராஜ், கன்னடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். இவர் கட்டுரைகள், கவிதைகள் மற்றும் அறிமுகங்கள் அடங்கிய ஏழு புத்தகங்களை எழுதியுள்ளார். இவரது குறிப்பிடத்தக்க படைப்புகளில் ‘கலா காயவுடில்லா’ மற்றும் ‘துடியஞ்சினல்லி உளிடா கவிதைகள்’ போன்ற கவிதைத் தொகுப்புகளும், ‘அங்கலடஞ்சின கனவரிகேகள்’ போன்ற கட்டுரைகளும் அடங்கும். அவரது சில கவிதைகள் ஆங்கிலம் மற்றும் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மேலும் அவரது எழுத்துக்கள் மங்களூர் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது. சுசீலா சீதாராம ஷெட்டி விருது மற்றும் சாகித்ய ரத்னா விருது உட்பட பல விருதுகளை இலக்கியப் பங்களிப்புகளுக்காக பெற்றுள்ளார்.